Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்த டிக் டாக் பிரபலம்.. சிக்குவாரா GP முத்து?

gp-muthu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்த டிக் டாக் பிரபலம்.. சிக்குவாரா GP முத்து?

டிக் டாக் வீடியோக்கள் கொடிகட்டி பறந்த காலத்தில் சினிமா வாய்ப்புக்காக பலர், தீவிரமாக வீடியோ எடுத்து, அதை இணையத்திலும் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் டிக் டாக் சூர்யா என்ற சூர்யா.

மேலும் இவர் குட்டி டவுசரில் ஆபாசமாக ஆடிய தோடு, டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து உடன் இணைந்து இரட்டை அர்த்த பாடல்களுக்கு டூயட் ஆடி, அந்த வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்தார். இந்த நிலையில் சினிமா வாய்ப்பிற்காக டிக் டாக்கை கையிலெடுத்த சூர்யா, சமீபத்தில் பார்த்த கேவலமான வேலையால் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இயங்கிவரும் மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 20க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆன லோகநாதன் தில்லை நகர், உறையூர், கேகே நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை செய்ய உத்தரவிட்டு இருந்தாராம். இதனால் விபச்சார தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் அப்பகுதிகளில் இறங்கினாராம்.

அப்போது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலில் டிக் டாக் சூர்யாவும் சிக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

tiktak-suriya-cinemapettai

tiktak-suriya-cinemapettai

ஆனாலும் சூர்யா தான் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றும், தனக்கும் இந்த மசாஜ் சென்டர்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இருந்தபோதிலும் சூர்யாவிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top