அடிக்கடி என்னை யூஸ் பண்ணிட்டு நம்பர ப்ளாக் பண்ணிடுவாங்க.. டிக்டாக் இலக்கியாவின் அட்ஜஸ்ட்மென்ட்

சினிமாவை பொறுத்தவரை பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அப்படி கூப்பிடுவது தற்போது பேஷனாகி விட்டது போல. பெண்கள் பட வாய்ப்பு கேட்டு சென்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக முன்னணி நடிகை சமந்தா முதல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி வரை புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது டிக்டாக்கில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் இலக்கியா. எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் இலக்கியா. இதை வைத்து பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பட வாய்ப்பு கேட்கிறாராம்.

ஆனால் தன்னை பயன்படுத்திக் கொண்டு பிறகு தன் நம்பரை பிளாக் செய்து விடுவார்கள் என சமீபத்திய பேட்டி ஒன்றில் வெட்ட வெளிச்சமாக கூறியுள்ளார் இலக்கியா. தன்னை அழைத்து தேவையானதை செய்து கொண்டு பிறகு தன்னை யாரென்றே தெரியாது போல் நடந்து கொள்வார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

tiktok-ilakkiya
tiktok-ilakkiya

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெயர் புகழ் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்துக் கொண்டதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்துக்காக என்ன தொழில் வேண்டுமானாலும் செய்வீர்களா எனவும் நெட்டிசன்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவரை திட்டி வருகின்றனர். சமீபத்தில்கூட பிரபல நடிகை வரலட்சுமி, அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டு படங்களில் நடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் வெட்ட வெளிச்சமாக கூறியிருந்தார்.

ஆனால் இவர் டிக்டாக்கில் தொடர்ந்து கவர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு ஆபாசமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பெரும்பாலும் இவர் நியாயமாக கூறும் எந்த கருத்துக்களுக்கும் ரசிகர்களிடம் ஆதரவு இல்லை.