Connect with us

Cinemapettai

டிக் டாக் மோகம் குடும்ப பெண்ணிற்கு நடந்த விபரீதம்.!

sucide

Tamil Nadu | தமிழ் நாடு

டிக் டாக் மோகம் குடும்ப பெண்ணிற்கு நடந்த விபரீதம்.!

டிக் டாக் செயலிக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். அதில் பாடுவது ஆடுவது ஒருவரை மற்றொருவர் கிண்டல் செய்வது போன்ற சித்தரித்து வீடியோக்களை likes வாங்குவதற்காக பதிவேற்றி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை விட திருமணமான பெண்கள் அதிகம் இதில் அடிமையாகியுள்ளனர்.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் முதலில் தடைவிதிப்பதாக கூறினார். பின்பு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால் டிக் டாக் ஆப் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீரான நத்தம் கிராமத்தில் உள்ள பழனிவேல் மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு மோனிஷா என்ற மகளும் அனீஸ் என்ற மகனும் உள்ளனர். அனிதா டிக் டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு குழந்தை கூட கவனிக்காமல் அதிக நேரம் அதற்காக செலவிட்டு வந்துள்ளார். இதனை குறித்து பழனிவேல் இருக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அனிதா தனது செயலை நிறுத்தவில்லை.

சமீபத்தில் அவர் மகன் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். ஆனால் மனைவி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுட்டார் அதனால் பழனிவேலு ஆத்திரமடைந்த அவர் சிங்கப்பூரில் இருப்பதால் மனைவிக்கு போன் செய்து திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி  விஷம் குடித்து அதனை டிக் டாக் பதிவேற்றி உள்ளார்.

அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவர் மயங்கியது பார்த்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது இந்த டிக் டாக் மூலம் ஓர் உயிர் பறிபோயுள்ளது மீண்டும் பலரும் டிக் டாக் தடை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top