டிக்டாக் மூடல் இன்னும் எத்தனை நாட்கள் தெரியுமா.. இன்னும் தரமாக வெளிவரும் சீனாகாரன்

நம்ம ஊரில் ஏதோ ஒரு விஷயத்திற்கு புரட்சி ஆரம்பித்து கடைசியில் புஸ்வானம் மாதிரி ஆவதுதான் வழக்கமாக நடக்கும் கதை. ஏற்கனவே கொக்ககோலா, பெப்சி போன்ற கோலா கம்பெனிக்கு எதிராக நடந்த போராட்டங்கள். குட்கா ஊழல், நுங்கம்பாக்கத்தில் வெட்டப்பட்ட சுவாதி கொலை, இப்படி பல சம்பவங்கள் அந்த சமயத்தில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் சில நாட்களில் புஸ்வானம் ஆகிவிடும்.

ஏற்கனவே டிக் டாக் போன்ற சீன செயலிகளுக்கு மற்றும் சீன பொருட்களுக்கும் தடை விதிக்கப் போவதாக பலமுறை கூறி இருக்கிறார்கள். இந்த முறையும் அதே போல ஒரு அறிவிப்பு தான். மேலும் மத்திய அரசு இன்னும் தடை செய்ததாக தெரியவில்லை.

டிக் டாக் நிறுவனமே அறிவிப்பை ஒரு நோட்டீஸ் போல வெளியிட்டு தற்சமயம் மூடப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். ஆக இந்த இந்தியா சீனா போராட்டம் முடிவுக்கு வரும்பொழுது கண்டிப்பாக சீனா மொபைல்களும் செயலிகளும் மற்றும் சீனா பொருட்களும் கண்டிப்பாக அமலுக்கு வரும்.

பின்பு எதற்காக இத்தகைய போராட்டங்களை நிகழ்த்தி ஒரு விளம்பரம் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களும் இது தெரியாமல் தாங்கள் சீன எதிர்ப்பு போராட்டம் போல நினைத்துக்கொண்டு அரசுகளை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். ஆனால் சீனாக்காரன் அந்த டிக்டாக் செயலியில் இன்னும் பல வசதிகள் வைத்து வெளியிட போறானாம்.

இன்னும் இரண்டு வாரங்களில் அல்லது அதிகபட்சம் இரண்டு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வருமாம். சீன பொருட்களுக்கு நிரந்தர தடை என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஏன் என்றால் பல சீன பொருட்கள் நம் பயன்பாட்டில் இருக்கின்றன. சரி இதற்கு மாற்றாக தயாரிக்கபடும் சிங்காரி, ரோபோசோ, போன்ற செயலிகளில் ஏகப்பட்ட குறைபாடு. கொஞ்சம் சப்போர்ட் செய்தால் அவர்களும் முன்னேறுவார்கள்.

நம் நாட்டில் திறமையான ஆட்கள் இருந்தும் அதற்கு மாற்றாக ஒரு செயலியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் தரமாக தயாரிக்கபடும் இந்திய பொருட்கள் கூட ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. நமக்கு பிம்பிளிக்கி பிளாப்பிதன்.