India | இந்தியா
டிக்டாக் வளர்ச்சியை பார்த்து தலைசுற்றி போன பேஸ்புக் நிறுவனம்.. இதையும் வாங்கிடுவாங்களோ!
வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், ஹலோ ஆப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் தற்போது உலக அளவில் மக்கள் ரசித்து தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் டிக் டாக் வளர்ச்சியை பார்த்து பேஸ்புக் நிறுவனம் அலறி உள்ளதாம்.
2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டிக் டாக் தற்போது ஃபேஸ்புக் பயனாளர்களை விட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை விட தற்போது டிக்டாக்கில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
இந்த செய்தியை கேட்டு பேஸ்புக் நிறுவனம் தலைசுற்றி போய்விட்டதாம். டிக் டாக்கில் ஆபாச வீடியோக்கள் வெளிவருவதால் சில தினங்களுக்கு தடைசெய்யப்பட்டது ஆனால் மீண்டும் ஒரு சில விதிமுறைகளுடன் வெளிவந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
2019ஆம் ஆண்டு 5.5 பில்லியன் மணி நேரம் செலவிடப்பட்டு உள்ளதாம். இது கடந்த 2018ஆம் ஆண்டை விட 6 மடங்கு அதிகமாகும். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் டிக் டாக்கின் செலவிடும் நேரம் 90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டில் 323 மில்லியன் ஆப் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஃபேஸ்புக் 156 மில்லியன் தான் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாம். 15 வருடத்திற்கு முன்பாக வெளிவந்த பேஸ்புக்கின் மேல் இருந்த மோகம் குறைந்து தற்போது டிக் டாகின் மோகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
டிக்டாக் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்களில் டவுன்லோட் செய்யலாம். இந்த அசுர வளர்ச்சியை பார்க்கும் போது ஃபேஸ்புக் டிக் டாக் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாம். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற முன்னணி சமூக வலைத்தளங்களை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
