Tamil Cinema News | சினிமா செய்திகள்
முடிவானது டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தேதி !
Published on
ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவான ’மிருதன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் டிக் டிக் டிக். மிருதன் முதல் தமிழ் ‘ஜோம்பி’ படம் என்றால்; இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ் – திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது.
டி.இமான் இசையமைக்க, ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ், அர்ஜுனன், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் புதிய ரிலீஸ் தேதி முடிவாகியுள்ளது.
