Reviews | விமர்சனங்கள்
ரசிகர்களிடம் டிக் வாங்கியதா இல்லையா ? டிக் டிக் டிக் திரைவிமர்சனம் !

சக்தி சௌந்தராஜன்
இன்றைய புதிய ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வரிசையில் அவர் இயக்கியுள்ள படம்.
ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை
அட நாம ட்ரைலரில் இருந்து கண்டு பிடித்தது தான், பூமியை தாக்க வரும் விண்கல்லை தகர்த்தெறிந்து பூமியை காப்பதே கதை. டீம் பார்ம் செய்வது, டெக்னாலஜியை நமக்கு புரியவைப்பது என்று தன் காய்களை அழாகாக நகர்த்தியுள்ளார் இயக்குனர். இத்தகைய கதையில் அப்பா மகன் செண்டிமெண்ட் வைத்தது கூடுதல் சிறப்பு.
படத்தின் பிளஸ்
கிராபிக்ஸ், கலை, இயக்குனர், ஒளிப்பதிவு, ஜெயம் ரவி, செண்டிமெண்ட் காட்சிகள்.
படத்தின் மைனஸ்
லாஜிக் மிஸ்ஸிங், மொக்கை வில்லனிசம், தொய்வான திரைக்கதை.
சினிமாபேட்டை அலசல்
இந்த மாதிரி படங்களில் டீம் நபர்கள் தான் ஸ்பெஷல் என்பதே. எனினும் அவர்களை பற்றி பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. அடுத்தது சயன்ஸ் பிக்ஷன் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு பாண்டஸி படம் பார்த்த விளைவு தான் ஏற்படும். எனினும் கிராபிக்ஸ், ஆர்ட் ஒர்க் அனைத்துமே சூப்பர். குறிப்பாக குறும்பா பாடல் இமான் அவர்களின் ட்ரடே மார்க். கடைசி வரை ஹீரோ – ஹீரோயின் காதல் வசப்படாமல் இருந்தது சூப்பர்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
பந்தா செய்யும் ஏ சென்டர் ஆடியன்ஸுக்கு ஏமாற்றத்தை தரும். எனினும் இந்த முயற்சியை நம் கோலிவுட்டில் கொண்டுவந்ததுக்கு மொத்த டீமுக்கும் நம் பாராட்டுக்கள். நான்கு பட்டு, மூன்று சண்டை என்று பன்ச் வசனம் பேசும் படங்களுக்கு மத்தியில் இப்படம் தனித்து தான் நிற்கும்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கு கொண்டு சென்றால் நிறைவான மகிழ்ச்சி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5.
