நிர்பயா வழக்கு.. கதற கதற தூக்கில் தொங்கிய கொலைகாரர்கள்.. ஜெய்ஹிந்த்!!

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் நான்கு (Akshay Thakur, Vinay Sharma, Pawan Gupta and Mukesh Singh)  பேர் கைது செய்யப்பட்டு மூன்று முறை தூக்கில் இருந்து தப்பியுள்ளனர்.

நான்காவது முறையாக குற்றவாளிகள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கு நேற்று முழுமையாக விசாரிக்கப்பட்டு நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளின் சார்பில் ஒருவரின் மனைவி விவாகரத்து கேட்டு உள்ளதாகவும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவதாக மனித உரிமை கழகம் கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளதால் தண்டனையை தள்ளிப் போட வேண்டும் என்று வாதாடி உள்ளனர்.

ஆனால் நீதிபதி இது சரியான வாதம் இல்லை என்றும் மூன்று முறை தண்டனையிலிருந்து தப்பித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.  டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு தூக்கிலிடுவதற்கான உடல் நிலை இருக்கிறதா என்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். கொரோன வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் இந்த வழக்கிற்கு குற்றவாளிகளுக்கா வாதாடிய வழக்கறிஞர் அதை விட கொடூரமான வைரஸ் என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

நிர்பயாவின் முழு வழக்கை பற்றி சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா படம் எடுக்கப் போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக குற்றவாளியின் வழக்கறிஞரின் முகத்திரையை கிழிக்க போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

என்னதான் சட்டத்தில் இருக்கும் ஓட்டையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்பயாவின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

ani-delhi
ani-delhi

தற்போது அதற்கான கடைசி நிமிடங்கள் முடிந்துவிட்டது, ஆனாலும் ஒரு பெண் துடிதுடித்து இறந்து போய் தனது கற்பை இழந்து நீதி கிடைப்பதற்கு 8 வருடங்கள் ஆகிவிட்டது சற்று கொடுமைதான். இன்றுடன் நிர்பயா வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது உண்மைதான் நீதி ஜெயித்து விட்டது ஜெய்ஹிந்த்.

Leave a Comment