இலங்கையில் 200 இணையத்தளங்களில் #புலிக்கொடி !! இணைய ஊடுருவலாளர்கள் கைவரிசை! ???
200க்கும் மேற்பட்ட இலங்கை இணைய தளங்களில் இனப்படுகொலை படங்கள் மற்றும் புலிக்கொடி ஏற்றி இணைய ஊடுருவலாளா்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
முடக்கப்பட்ட இணைய முகவரிகளுக்கள் நுளையும்போது முகப்பில் புலிக்கொடியும் முள்ளிவாய்க்கால் படுகொலைப் படங்களும் காணப்படுகின்றன.
பின்னணியில் வீழமாட்டோம் நாம் வீழ மாட்டோம் எனும் பாடல் ஒலித்துக்கொண்டிருப்பதையும் கேட்க முடிகின்றது.
இதில் சென்று பார்வையிடலாம்.

முள்ளிவாய்காலில் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு இன்று அதன் 08 ஆம் ஆண்டு நினைவுநாளை அனுஸ்டித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலிருந்து இலங்கையின் இணையங்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுவந்ததாக தெரிய வருகின்றது.
தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் வர்த்தக இணையங்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த இணையங்களே பெருமளவில் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன.
பெருமளவாக குருநாகல, அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இணையங்கள் முடக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசினது உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் சிலவும் முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
gov.lk முகவரியுடைய இலங்கை அரசின் முகவரியுடைய சில இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.