ஏர் டெக்கான் விமானத்தின் டிக்கெட் விலை நிஜத்தில் இவ்வளவா.? ஆனா படத்துல ஒரு ரூபான்னு சொன்னாங்க!

தற்போதெல்லாம் அனைத்து சினிமா திரை உலகிலும், சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை எடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சூர்யா- சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் சூரரைப்போற்று.

இந்தப்படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை  உருவாக்கிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு கோபிநாத், சூர்யாவையும், சுதா கொங்கராவையும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர் டெக்கான் விமானத்தின் டிக்கெட் விலை தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அதாவது முன்னாள் விமான ராணுவ வீரரான கோபிநாத் ஓய்வு வாங்கிய பிறகு தனி விமான நிறுவனம் ஒன்றை தொடங்க நினைத்தாராம். இதனால் அவருக்கு பல தோல்விகள், அவமானங்கள், அடிமேல் அடி என விழ, பல வருட போராட்டத்திற்கு பிறகு கோபிநாத் 2003 ஆம் ஆண்டு ‘ஏர் டெக்கான்’ என்ற விமான நிறுவனத்தை அரசின் அனுமதி பெற்று தொடங்கினார்.

அதற்குப் பிறகு மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைந்து தனது மதிப்பை இழந்து, பின்னர் மீண்டும் உயிர் பெற்று தற்போது டெக்கான் நிறுவனமாக உயர்ந்து பறந்து கொண்டிருக்கிறார். இந்த உண்மை கதையை மையமாக வைத்துதான் சூரரைப்போற்று படம்  உருவானது.

மேலும் இன்று  வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 34-க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி வருகின்றார் கோபிநாத். அந்த விமானங்களில் பயணிக்க ஒருவரது டிக்கெட்டின் விலை அதிகபட்சமாக 2500 ரூபாய் மட்டும் தான் என அரசு அனுமதியுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலர், ‘படத்துல ஒரு ரூபான்னு சொன்னீங்க.. இப்போ 2500ரூபான்னு சொல்றீங்க’ என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.