கார்த்திக் நரேன் ஒரு இளம் படைப்பாளி. இவர் இயக்கிய துருவங்கள் பதினாறு படம் தான் இவரின் அறிமுக படம் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் நல்ல அறிமுகத்தை கொடுத்துவிட்டது இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு.

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது அதுமட்டும் இல்லாமல் அனைவரையும் பாராட்ட வைத்தது. இதனை தொடர்ந்து இவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசுரன்’ என்னும் படத்தை இயக்கிவருகிறார்.

தற்போது அவர் கொடுத்த தகவலின் படி, அவரது அடுத்த படத்தின் பெயர் ‘நாடக மேடை’ என்று தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் 2018ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் குழுவை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.