Tamil Cinema News | சினிமா செய்திகள்
துருவங்கள் 16 இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!
துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் கிரைம் திரில்லர் படமாகும். இந்த படம் கடந்த ஆண்டில் வெளியானது இத்திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் ரகுமான் நடித்தார் ரகுமான் தவிர இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஏனைய நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருப்பினும் இத்திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது
மேலும் இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருந்தார். டார்க் சஸ்பன்ஸ் திரில்லர் படம். இந்த தியேட்டரில் நன்றாக ஓடிய படம்.
தற்போது கார்த்திக் நரேன், ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் கெளதம் மேனன் தனது ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் கார்த்திக் நரேன். ‘மூன்றாவது படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
என் மனதிற்கு நெருக்கமான ஸ்கிரிப்ட்டை எழுதி இருக்கிறேன். விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும் எறு டுவிட்டரில் கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ளார்.
