Thupparivaalan-Movie_cinemapettai

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துப்பறிவாளன். இந்த படம் இன்று வெளிவருவதாய் இருந்தது. ஆனால் தற்போது நீதி மன்றத்தடையால் இதன் வெளியீடு தள்ளிபோய் உள்ளது.

துப்பறிவாளன் படத்தின் விநியோக உரிமையை ஒரு நிறுவனம் ஒரு மிகப் பெரிய தொகைக்கு எடுத்திருந்தது. ஆனால் இறுதியில் அப்படத்தின் விநியோக உரிமையை விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி எடுத்துக்கொண்டது.

அதிகம் படித்தவை:  கதகளி விமர்சனம் | Kathakali Review

இதனால் முன்பு விநியோக உரிமை பெற்றிருந்த படம் தங்களுக்கான முழு பணத்தையும் திருப்பிக் கொடுக்கும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.Thupparivaalan-Movie_cinemapettai

விஷால் தரப்பில் தற்போது 25 லட்சம் பணமும் 17 திரையரங்குகளின் விநியோக உரிமையையும் தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இதனை ஏற்காத விநியோகஸ்தர்கள் முழுப்பணமும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்த வழக்கு விசாரணையின்போது இன்று காலை 10.30-க்குள் பணம் திருப்பி தருவதாக விஷால் பட நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, உத்தரவாதம் அளித்தபடி பணத்தை திருப்பிகொடுக்காவிட்டால், படத்தை வெளியிடக்கூடாது என்ற தடை அமலாகும் என்று கூறி வழக்கு விசாரணையை வருகின்ற 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் அறிவிக்கப்பட்ட தேதியான இன்று படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.