துப்பறிவாளன் ஆரம்பமாவது உறுதி - Cinemapettai
Connect with us

Cinemapettai

துப்பறிவாளன் ஆரம்பமாவது உறுதி

mysskin-vishal-new-film-thupparivalan

துப்பறிவாளன் ஆரம்பமாவது உறுதி

விஷால் தற்போது கத்திச் சண்டை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்; படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்றார்கள். இதனிடையே விஷால் கடைசியாக நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் அவருடைய படத்திற்கு யாரும் பைனான்ஸ் செய்ய முன் வரவில்லை என்றார்கள்.

அதனால் துப்பறிவாளன் படம் ஆரம்பமாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இப்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.மிஷ்கின் தற்போது துப்பறிவாளன் படத்திற்காக லொகேஷன் பார்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளார். இப்போது முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அடுத்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top