2 வருடம் கழித்து துப்பறிவாளன் 2 பட அறிவிப்பை கொடுத்த விஷால்.. ஆனாலும் அந்த பிரச்சனை இருக்கு!

விஷாலும் வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. நேற்று வந்த நடிகர்கள் கூட தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போது பல வருடங்களாக ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் ஒரு படம் கூட வெற்றி கொடுக்க முடியாமல் தடுமாறுவது சோகமாகத்தான் உள்ளது.

இதை மாற்றத்தான் மிஷ்கின் மற்றும் விஷால் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமான துப்பறிவாளன் 2 படம் விறுவிறுப்பாக லண்டனில் உருவாகி வந்தது.

ஆனால் மிஸ்கின் வேண்டுமென்றே படத்தின் பட்ஜெட்டை அதிகரித்து விட்டதாக விஷால் அவருடன் சண்டை போட, பதிலுக்கு மிஷ்கினும் மேடைக்கு மேடை அவரைப் போட்டுத் தாக்க மொத்தமாக பிரிந்துவிட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாக துப்பறிவாளன் 2 படத்தின் நிலை என்ன ஆனது? என்பதே தெரியவில்லை. இந்த பிரச்சினை வந்த நேரத்தில்தான் விஷால் தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாக தெரிவித்தார்.

அதன் பிறகு அது பற்றிய அறிவிப்பும் இல்லை. நீண்ட நாட்களாக படம் வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக துப்பறிவாளன் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை கொரானா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் துப்பறிவாளன் 2 படம் விரைவில் வெளியாக உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. பெரும்பாலும் இந்த படம் ஓடிடி ரிலீசாக இருக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விஷால் வட்டாரங்கள்.

thupparivaalan 2
thupparivaalan 2
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்