Connect with us

Cinemapettai

தளபதி65 படத்திற்கு நீங்கதான் இசை.. விஜய் முடிவு.. எல்லாம் முனுமுனுக்கும் அந்த பாட்டுதான் காரணமாம்

thuppakki2-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி65 படத்திற்கு நீங்கதான் இசை.. விஜய் முடிவு.. எல்லாம் முனுமுனுக்கும் அந்த பாட்டுதான் காரணமாம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். மாஸ்டர் படம் தற்போது நிலவி வரும் சூழ்நிலை சரியில்லாததால் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.

முருகதாஸ் இயக்கப் போகும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. மேலும் சமீபத்தில் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சம்பந்தமே இல்லாமல் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் துப்பாக்கி-2 படம் தான் உருவாகிறது என கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். ஏனெனில் துப்பாக்கி படத்தின் முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பிஜிஎம் முதல் பாடல்கள் வரை அனைத்தும் சூப்பர் ஹிட்.

ஆனால் சமீபகாலமாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் எந்த படமும் சரியாக செல்லவில்லை. இதனால் கவலையடைந்த தளபதி 65 படக்குழு துப்பாக்கி2 படத்தின் இசையமைப்பு பணியை பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் தமன் இடம் தூக்கி கொடுத்துள்ளது.

சமீபத்தில் தமன் இசையில் வெளியான புட்ட பொம்மா பாடல் உலகம் முழுவதும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தளபதியின் தீவிர ரசிகரான தமன் ஏற்கனவே விஜய்யிடம் வாய்ப்பு கேட்டதாகவும், விரைவில் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று தளபதி கூறியதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

தமன் தான் இசையமைப்பாளர் என்ற செய்தி இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இருந்தாலும் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதே இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராததால் ரசிகர்கள் கனவுக் கோட்டை கட்ட வேண்டாமெனவும் கூறிக்கொள்கிறோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top