விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’.மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய்ராய், சிம்ரன், ஆண்ட்ரியா, அனுஇமானுவேல், ஜான்விஜய், கே.பாக்யராஜ் முதலானோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இம்மாதம் 14-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
‘துப்பறிவாளன்’ படத்தை , 22 கோடி ரூபாய்க்கு ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் எடுத்து ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்திடம் விஷால் கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இந்த 22 கோடியில் விஷாலின் 4 கோடி சம்பளமும் அடக்கம்.
விஷால் நடிக்க மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்த கத்தி சண்டை படத்தில் ஏற்பட்ட நஷ்டம் 3 கோடியை கழித்துக் கொண்டு 19 கோடியை தருவதாக விஷாலிடம் வாக்கு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் நந்தகோபால்.
ஆனால் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்தநிலையில் இதுவரை 9 கோடியை மட்டுமே விஷாலிடம் கொடுத்துள்ளார்.

பாக்கி 10 கோடியை தராமல் இன்று நாளை என இழுத்தடித்திருக்கிறார்.
இந்தநிலையில் துப்பறிவாளன் படத்தின் பெயரில் 23 கோடி ரூபாயை நந்தகோபால் கடன் வாங்கிய விவரம் விஷாலுக்கு தெரிய வர கடுப்பாகிவிட்டாராம்.

என்னுடைய படத்தின் பெயரில் கடன் வாங்கிவிட்டு, அதை வேறு படத்திற்கு செலவு செய்ததோடு, எனக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்காமல் இழுத்தடித்தால் என்ன அர்த்தம்? என்று கத்தி தீர்த்துவிட்டாராம் விஷால்.ரிலீஸுக்கு முன் 10 கோடியைக் கொடுக்காவிட்டால் தன்னுடைய பேனரிலேயே துப்பறிவாளன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் விஷால்.