பட்டையை கிளப்பிய துணிவு செகண்ட் சிங்கிள்.. எப்படி இருக்கிறது காசேதான் கடவுளடா பாடல் வீடியோ ?

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்துக்கு இது மூன்றாவது படம். ஏற்கனவே ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்த முறை எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருவரும் இருக்கின்றனர்.

துணிவு படத்தின் தியேட்டர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. துணிவு படத்திற்கு தமிழகத்தில் பெரும்பான்மையான தியேட்டர்கள் கிடைத்து இருக்கின்றன. பொதுவாக அஜித் தன்னுடைய படங்களின் பாடல்களில் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டார். ஆனால் இம்முறை பாடல்களுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

Also Read: அஜித் பெருசா, விஜய் பெருசா சொல்றதுக்கு இவன் யாரு.. வாரிசு தயாரிப்பாளரை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.!

துணிவு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அஜித் படத்தில் முதன்முறையாக இவர் இசையமைக்கிறார். இவரது இசையில் சமீபத்தில் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சில்லா சில்லா ‘ வெளியானது. இந்த பாடல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த பாட்டை அனிருத் பாடியிருந்தார்.

இந்நிலையில் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என நேற்று ஜிப்ரான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதன்படி செகண்ட் சிங்கிளான ‘காசேதான் கடவுளடா’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியிருக்கிறார். இந்த பாடல் கொஞ்ச நாளுக்கு முன்பே லீக்கானது குறிப்பிடத்தக்கது.

Also Read: துணிவுக்கு பின்னால் இருக்கும் பெரிய பலம்.. வசூலில் பெரிய அடி வாங்க போகும் வாரிசு

காசேதான் கடவுளடா, ஸ்விஸ்சுல இருக்கு காந்திக்கும் கணக்கு, ஏகப்பட்ட EMIல நாடே கெடக்கு, மனுஷன மிருகமா மாத்திடும் மணி, டிஜிட்டல் வார்ல்ட்க்கு மாறுமோ இனி என இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற லிரிக்சை எழுதியிருக்கிறார் வைசாக். மேலும் இந்த பாடலை வைசாக், ஜிப்ரான், நடிகை மஞ்சு வாரியார் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

பாடல் மூன்று நிமிடத்திற்கும் குறைவாகவே இல்லது. மஞ்சு வாரியார் இதில் பாடியிருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் அவருடைய குரல் தனியாக கேட்கவே இல்லை, கோரசாகவே இருக்கிறது. மேலும் அஜித்துக்கு நடன அசைவுகளும் குறைவாகவே இருக்கிறது. ‘சில்லா சில்லா’ பாடலை ஒப்பிடும் போது இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.

Also Read: துணிவுக்கு பின் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் எச் வினோத்.. யாரும் எதிர்பார்க்காத மெர்சல் கூட்டணி