துள்ளுவதோ இளமை ஷெரீனை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல் படத்திலேயே தனுசுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

sherin

அதையடுத்து, ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர்-1, கோவில்பட்டி வீர லட்சுமி ஆகிய படங்களில் நடித்த ஷெரீனுக்கு பின்னர் சரியான படங்கள் அமையவில்லை.அதனால் கன்னடம், மலையாளம் என்று நடித்து வந்தவர், ஒருகட்டத்தில் நான் டைரக்சன் பண்ணப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வெளிநாடு சென்று படித்து விட்டு மீண்டும் சினிமா உலகத்திற்குள் வந்தார்.

ஆனால், அவரை நம்பி சான்ஸ் கொடுக்க டைரக்டர்கள் மட்டுமின்றி, அவரது நெருக்கமான ஹீரோக்களும் அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.அதனால் டைரக்ஷன் செய்யும் முயற்சியை ஓரங்கட்டி விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார் ஷெரீன்

sherin

நடிகர் தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

அதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார்.

sherin

தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். வந்ததோடு தன் உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் குறைத்து மிகவும் சின்னப் பெண்ணாக தெரியும்படி மாற்றிக்கொண்டார்.

அதன்பிறகு, ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராஃபரை அணுகி கவர்ச்சியான, விதவிதமான போஸ்களில் படமெடுக்கச் சொல்லி, இங்கேயுள்ள அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

sherin

தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் அம்மணி. சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார். இதில், முகம் குண்டாகி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.