Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீபாவளியன்று சந்திக்கலாமா ? வீடியோ வெளியிட்ட தக்ஸ் ஆப் ஹின்தோஸ்தான் அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன்.
Published on
தக்ஸ் ஆப் ஹின்தோஸ்தான்
இது பீரியட் ட்ராமா பிலிம். பிரிட்டிஷ் இந்தியா காலம் தான் கதைக்களம். பிலிப் மேடொஸ் என்பவர் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகிறது இப்படம்.

Team Thugs -katrina-fatima-aamir
அமிர் கான், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷரோப் , கத்ரீனா கைப், தங்கல் புகழ் பாத்திமா சனா ஷேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை அஜய் அதுல். ஒளிப்பதிவு மனுஷ் நந்தன். எடிட்டிங் நம்ரதோ ராவ். திரைக்கதை, இயக்கம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இப்படம் இந்த ஆண்டு நவம்பரில் ரிலீசாக உள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 8 தீபாவளியன்று ரிலீசாகிறது. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழில் பேசியுள்ளார் இரண்டு சூப்பர் ஸ்டார்களும்.
