தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் 15 பேர் பயணம் செய்யும் டாக்ஸியில் தனது வீட்டுக்கு செல்வதற்காக ஏறிய இளைஞருக்கு மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத அறையில் ஒரு படுக்கையில் இருந்துள்ளார்.

மயக்கம் தெளிந்த இளைஞருக்கு சக்தியூட்டும் பானம் மட்டும் கொடுத்து 3 பெண்கள் மாறி மாறி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

தினசரி பலமுறை துஷ்பிரயோகம் செய்ததாலும், தூங்க அனுமதிக்காததாலும், வெறும் சக்தியூட்டும் பானம் மட்டுமே குடிக்கக் கொடுத்ததாலும் அந்த இளைஞரின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு அந்த இளைஞரை ஆளில்லாத இடத்தில் அரை நிர்வாணமாக விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஆண், பெண் என பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.