fbpx
Connect with us

Cinemapettai

இந்த ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் தமிழ் ரீ மேக்குக்கு தல அஜித் தான் பெஸ்ட். என்ன நான் சொல்றது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் தமிழ் ரீ மேக்குக்கு தல அஜித் தான் பெஸ்ட். என்ன நான் சொல்றது.

தல அஜித் வைத்து ரிமேக் செய்யக்கூடிய டாப் 3 ஹாலிவுட் படங்கள்.

AJITH – அஜித் குமார்

தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில. வருடத்திற்கு ஒரு படம் என்ற கான்செப்டுக்கு வந்துவிட்டார். ரசிகனின் ரோல் படம் பார்ப்பதுடன் சரி, பின்னர் குடும்பத்தை பார்ப்பதே அவன் கடமை என்பதை வலியுறுத்துபவர்.

தற்பொழுது பிங்க் ரிமேக்கில் நடித்துவருகிறார். சமுதாய சீர்கேட்டால், அதில் சிக்கும் மூன்று பெண்களுக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல் வேடம். இந்நிலையில் அஜித்துக்கு ஹாலிவுட் படங்களின் கதையை ரெடி செய்து படமாக்கினால் எந்த படங்கள் பெஸ்ட் என்பதன் தொகுப்பே இந்த பதிவு …

டேக்கன்

taken 3

ஹாலிவுட்டில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்த படம் தான் டேக்கன் ( taken 2008). இந்தப்படத்தின் கதாநாயகன் லயம் நீசன், அப்பொழுது அவர் வயது 56. இந்தப்படத்தில் தன் மகளை கடத்தியவர்களை துரத்தி வேட்டையாடி பழி வாங்குவார் நம்ப ஹீரோ. ஆயுதங்கள் குறைவாக வைத்துக்கொண்டு கெத்தாக சண்டைபோடுவதுபோல் இவர் கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கும். 2012 மற்றும் 2015ல் மேலும் இரண்டு டேக்கன் பாகங்கள் வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட் தான்.

Ajith-Photos

டெக்னலாஜி, பதட்டம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்வது தல அஜித்துக்கு அசலாக பொருந்தும். ஷங்கர் போன்ற இயக்குனர், பவர்புல் மெஸேஜ், ரஹ்மான் இசை என்றால் அசத்தல் கம்போ தான் இப்படம். ஏற்கனவே நம் தமிழில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களில் இவரை நாம் அத்தகைய ஸ்டைலிஷ் பதட்டம் ஆகாத ரோலிலும் பார்த்துள்ளோம்.

பாஸ்ட் அண்ட் தி பியூரியஸ்

திறமையான கார் ரேஸர்களை ஹீரோவாக கொண்டு ரெடியாகி வரும் பார்ட் சீரிஸ் படங்கள். இதுவரை எட்டு பாகங்கள் வெளிவந்துவிட்டது. உலகமே அடுத்த பார்ட்டுக்காக வெய்டிங்.

Fast and Furious 8 - Tamil

Fast and Furious 8

ஜேசன் ஸ்டத்தம் ரோலில் தல அஜித், வின் டீசல் ரோலில் என்னை அறிந்தால் அருண் விஜய் என இரண்டு ரசிர்களை பயன்படுத்தலாம். மேலும் ஆரம்பம் ராணா டகுபட்டி, பின்னர் மங்காத்தா, சென்னை 28 பட பாய்ஸ் சேரும் பட்சத்தில் அசத்தல் டீம் ரெடி.

ajith

ajith

வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசை என்று இறங்கினால் அசத்தல் சேசிங் காட்சிகள், பேங்க் திருட்டு, அதிரடி ஆக்ஷன் என பட்டய கிளப்பும் இந்த டீம்.

ஜான் விக்

ஹாலிவுட்டிலும் அதிரடி ஆக்ஷன் கலந்த மாஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அது போன்ற கலக்கல் மசாலா பட சீரீஸ் தான் இது. படத்தின் ஹீரோவாக கேனு ரீவ்ஸ் மிரட்டுவார். 2014 இல் வெளியான முதல் பார்ட் ஹிட் என்றால், 2017 இல் வெளியான இரண்டாவது பார்ட் சூப்பர் டூப்பர் ஹிட். மூன்றாவது பார்ட் இந்த வருடம் மே 17 ரிலீஸ்.

john-wick-chapter-3-parabellum

நியோ நாயர் ஜானரில் திரைக்கதை அமைத்து தோட்டா தெறிக்க தெறிக்க படத்தை எடுத்திருப்பார் இயக்குனர் சாட் ஸ்டாலெஸ்கி. தன் மனைவியின் மரணத்துக்கு பின் ஒதுங்கி இருக்கும் ஒருவனை சீண்டினால் தனியாளாக எவ்வாறு அனைவரையும் தும்சம் செய்வான் என்பதை சொல்வதே இப்படம்.

billa ajith stills

billa

ஒன் மேன் ஆர்மியாக ஏற்கனவே நாம் பரமசிவன், விவேகம் படங்களில் பார்த்துள்ளோம். அனிருத் இசையில் தோட்டா மற்றும் குண்டுகள் முழங்க, அட்லீ போன்ற இயக்குனர் படத்தில் இணைந்தால் எமோஷனல் காதல் காட்சிகளும் சரி ஆக்ஷன் பகுதிகளும் தெறி வகையறா தான்.

நாங்கள் மிஸ் செய்து, உங்களுக்கு ஏதேனும் தோன்றும் பட்சத்தில் கமெண்டில் பதிவு செய்யுங்க …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top