விஜய் சேதுபதி கட்டுப்பாட்டிலிருக்கும் 3 நடிகைகள்.. 9 படங்களில் ஒன்றாக நடித்த அதிர்ஷ்டசாலி

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் இருந்து தன்னுடன் நடித்த மூன்று நடிகைகளை தற்போது வரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவர்களுக்கு மற்ற நபர்களிடம் சிபாரிசு செய்வது அல்லது தனது படத்தில் பட வாய்ப்பு கொடுப்பது என அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார். அந்த நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

காயத்ரி: விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து 9 படங்கள் நடித்துள்ளனர். இதில் பல படங்களில் ஜோடி சேர்த்து நடித்திருந்தனர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், துக்ளக் தர்பார், சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் இருவரும் நடித்துள்ளனர்.

Also Read : அடுத்த விஜய் சேதுபதி போல் வளர்ந்து வரும் தமிழ் நடிகர்.. அலட்டாத இயல்பான நடிப்பு!

இவ்வாறு தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களில் காயத்ரி இடம் பெறுவதால் இவர்கள் இடையே கிசுகிசுக்கள் வெளியானது. அப்போது காயத்ரி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். ஒரே ஜோடி பல படங்களில் நடித்தால் இப்படி எழுதுவீர்களா என கோபப்பட்டு இருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடையே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் நெருங்கிய நட்பு வட்டாரம் இருந்து வருகிறது. ரம்மி படத்தில் தொடங்கி க/பெ ரணசிங்கம் வரை இந்த நட்பு தொடர்கிறது.

Also Read : அடுக்கடுக்கா குவியும் பட வாய்ப்புகள்.. அம்மணியின் மாஸ்டர் திட்டத்தால் மற்ற நடிகைகள் கதறல்

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ ரணசிங்கம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். செக்க சிவந்த வானம் போன்ற ஒரு சில படங்களில் விஜய் சேதுபதியுடன் தொடர்பில்லாத கதாபாத்திரங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அசத்து இருந்தார்.

மடோனா செபாஸ்டியன்: விஜய் சேதுபதியுடன் கவண், காதலும் கடந்து போகும், ஜிங்கா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார் மடோனா செபாஸ்டியன். ஆனால் மடோனாவுக்கு எதிர்பார்த்த அளவு தமிழ் சினிமாவில் வரவேற்பை கிடைக்கவில்லை. இதனால் இவருக்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் விஜய் சேதுபதி சிபாரிசு செய்த வருகிறாராம்.

Also Read : மணக்க மணக்க மல்லிகை பூவுடன் மடோனா.. பட்டும்படாமலும் கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள்

Next Story

- Advertisement -