ரசிகர்கள் மட்டும் இல்லை என்றால் பொட்டியை கட்டிட்டு ஊருக்கு போய்விடுவேன் என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் 6 படங்களுக்கு மேல் நடித்து புது பாணியை படைப்பதில் வல்லவராக இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் 6 படங்களில் ஒப்பந்தமாகியும், அதே அளவிலான படத்தை ரிலீஸ் செய்வதையுமே வழக்கமாகி வைத்து இருக்கிறார். தற்போது, விஜய் சேதுபதி இந்திய சினிமாவின் மூன்று சூப்பர்ஸ்டார்களுடன் கை கோர்த்து இருக்கிறார். அதிலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களிடம் மாஸ் ரீச்சாகி இருக்கிறது,

vijaysethupathy

இதே வேளையில், தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியது. முதலில் புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, படப்பிடிப்புகள் முதல் சினிமா நிகழ்ச்சிகள் வரை ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது.

அதிகம் படித்தவை:  அய்யய்யோ! காந்தியை காணோம்! ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் அதிர்ச்சி!

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சினிமாத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதன்படி, படத்தின் வெளியீட்டிற்காக சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வருகின்றனர். இதை குறைக்க ஒரு வழியை முடிவு செய்தது தயாரிப்பாளர்கள் சங்கம். அது குறித்து, நடிகர்களுடன் விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சந்திப்பில், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி மட்டுமே கலந்து கொண்டனர்.

சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, தற்போது தயாரிப்பாளர்கள் சம்பளத்தில் 10 சதவீதத்தை மட்டும் வாங்கி கொண்டு மீதியை பட வெளியீட்டிற்கு பிறகு வாங்கி கொள்ள சொல்கிறீர்கள். கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், தற்போது 75 சதவீத சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறோம். எனக்கு ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு கோடி வரை மீதி வைக்கப்படுகிறது. இதனால், எனக்கு இதுவரை 20 கோடிக்கு மேல் பாக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவே நான் பணத்தை மட்டும் யோசித்து இருந்தால் என்றைக்கோ சொந்த ஊருக்கு வண்டி ஏறி இருப்பேன். என்னுடைய ரசிகர்களுக்காக மட்டுமே தொடர்ந்து படங்களை செய்து வருகிறேன் என பெரும் ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் மச்சினிக்கு வந்த பரிதாப நிலை?
vijaysethupathy

இதனால், தமிழ் சினிமாவிற்கு நடிகர்களுக்கு பெரும் நஷ்டம் என பேசிய பெரிய தலைகள் பேச முடியாமல் வாயடைத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.