சுந்தர் சி. தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் அதிக திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.

இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.

இயக்குனர் சுந்தர்.சி மீது துணை நடிகர் மற்றும் இயக்குனரான வேல்முருகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த 27 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். 4 படங்களுக்கு கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளேன். 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் இணை செயலாளராக பணியாற்றி இருக்கிறேன்.

sundar-c-story_

நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி எனக்கு நெருங்கிய நண்பர். அவரது பல படங்களில் நடித்திருக்கிறேன். துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். கதை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும்.

தற்போது தொலைக்காட்சி ஒன்றில் நந்தினி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொடரின் கதையை நான் தான் எழுதினேன். தனது நிறுவனத்தின் மூலம் அதனை சுந்தர்.சி தயாரித்து ஒளிப்பரப்புகிறார். நந்தினி கதையை என்னிடம் பெற்றுக் கொண்ட சுந்தர்.சி அதற்காக ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்தார். மீதி 46 லட்த்தை தர மறுக்கிறார்.

அதனைக் கேட்டால் அடியாட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார். அவர் மோசடி செய்ததற்கான போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சுந்தர்.சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவரால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இப்படி இயக்குனர் எல்லாம் அடியாள் வைத்து மிரட்டுன நடிகர் மற்றும் துணைநடிகர் எல்லாம் எங்க போவாங்க.