fbpx
Connect with us

Cinemapettai

தோனி ரிட்டையர் ஆகும்போது இப்படித்தான் பேசியிருப்பார்.. தோனி குரலில் மிமிக்ரி செய்து அசத்திய ட்ரெட்மில் டான்ஸர் அஸ்வின் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோனி ரிட்டையர் ஆகும்போது இப்படித்தான் பேசியிருப்பார்.. தோனி குரலில் மிமிக்ரி செய்து அசத்திய ட்ரெட்மில் டான்ஸர் அஸ்வின் வீடியோ

மலையாள சினிமாவில் பிரபலமானவர் அஷ்வின் குமார், இவர் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் அண்ணாத்த ஆடுறார் என்ற பாடலை ட்ரெட்மில் நடனமாடி கமலஹாசன், பாராட்டும் அளவிற்கு புகழ் பெற்றார்.

அந்த நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்குப் பின்னர் தளபதி நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலையும் மிக அற்புதமாக ஆடியிருப்பார்.

தமிழ் சினிமாவில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.

உலக மக்களையே வருத்தத்தில் ஆழ்த்தி உள்ள தல தோனியின் ஓய்வுவை, தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் நேரிலேயே கூறியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை அஸ்வின் மிக அற்புதமாக மிமிக்ரி செய்து வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது அந்த வீடியோ தோனி ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இவர் நடிப்பை தாண்டி, நடனத்தையும் தாண்டி, ஒரு சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார்.

மலையாள சினிமாவை போல் தமிழ் சினிமாவையும் நேசிக்கும் இதுபோன்ற கலைஞர்களை இயக்குனர்கள் ஆதரித்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதுபோன்று இளைஞர்களின் அற்பணிப்பு கண்டிப்பாக சினிமா துறையினருக்கு அவசியம்தான்.

முழு வீடியோ பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் :- InstaGram

Continue Reading
To Top