Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆயிரம் தடவை என் மனது உடைந்தது… கதறி அழுத சன்னி லியோன்

sunny-leone-cinemapettai

ஆபாசப் படங்களில் நடித்துவந்த சன்னி லியோன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கனடாவில் பிறந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை சன்னி லியோன் அடியோடு நிறுத்திவிட்டார். கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து 2 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ள சன்னி, வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறார். இந்தநிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு, அவரது ஒரிஜினல் பெயரான கரண்ஜித் கௌர் வோஹ்ரா என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுக்கப்படுகிறது. கரண்ஜித் கௌர் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் என்ற தலைப்பில் தயாரிக்கப்படும் அந்த வெப் சீரிஸில் சன்னி லியோனும் நடித்திருக்கிறார்.

மாடலிங் மற்றும் ஆபாசப் படங்களில் தனது 19 வயதில் நடிக்கத் தொடங்கிய கரண்ஜித் கௌர், 2001-ம் ஆண்டில் பிரபல பெந்த்ஹவுஸ் இதழின் பெட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னரே அவருக்கு சன்னி லியோன் என புனைப் பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சன்னி லியோன், `எனது பெயர் எப்படி இடம் பெற வேண்டும் என கேட்டார்கள். முதல் பெயரில் சன்னி இருக்க வேண்டும் என கூறி, பிற்பகுதி பெயரை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று நான் சொன்னேன். அதன்பின்னரே எனது பெயர் சன்னி லியோன் என ஆனது. இதில் சன்னி என்பது எனது சகோதரர் சந்தீப்பின் செல்லப்பெயர்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தனது வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்படும் வெப் சீரிஸில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் சில கருத்துகளை சன்னி பகிர்ந்துள்ளார். கரண்ஜித் கௌருக்கு ஒரு மடல் என்ற தலைப்பிலான வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் அவர், `என்னுடைய மனது ஆயிரம் தடவை உடைந்தது. ஆயிரம் முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான ஜிஸம்-2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சன்னி லியோன், தற்போது 9-க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி ஹீரோக்களில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவும் செய்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் ஜெய்யுடன் ஒரு குத்துப் பாட்டில் நடனமாடிய அவர், தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனது இமேஜை மாற்றும் என நம்பிக்கையுடன் இருக்கும் அவர், படத்தில் நடிப்பதற்காக குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்டவைகளில் பயிற்சி பெற்று களமிறங்குகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top