fbpx
Connect with us

Cinemapettai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தன் உறவினரை பலி கொடுத்த ஸ்டண்ட் சில்வா .

Tamil Nadu | தமிழ் நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தன் உறவினரை பலி கொடுத்த ஸ்டண்ட் சில்வா .

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர் பொதுமக்கள். நேற்று பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் தமிழரசன், சண்முகம், கிளாஸ்டன், கந்தையா, மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ஜெயராமன் மற்றும் வெணீஸ்டா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மோசமான நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்டண்ட் சில்வா

இந்நிலையில் தன் தங்கையின் கணவர் இந்த  சம்பத்தில் உயிர் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை மற்றும் மாலையில் மறுபடி போலீஸ் சுட்டுள்ளதாக தக்வல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செல் போன் டவர் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாக் செய்யப்பட்டுள்ளது. இணைய சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உயிர் இழந்தவர்கள், மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணத்தை கொடுத்து ஈடுகட்ட நினைக்கும் அரசு, தூத்துக்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும் விடிவு காலம் பிறக்க எந்த நடவெடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top