Tamil Cinema News | சினிமா செய்திகள்
கூவத்தூர் பேரம் எங்கே? தோப்பு கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மீண்டும் போர்க்கொடி! எடப்பாடி பீதி!
சென்னை: அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் தலைமயில் 11 எம்.எல்.ஏக்கள் இன்று மீண்டும் கூடி ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பல அணிகளாக சிதைந்து போயுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தோப்பு கோஷ்டி
இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ரகசிய ஆலோசனை நடத்தி இருந்தனர். இதனால் எடப்பாடி அரசு கவிழந்துவிடும் எனக் கூறப்பட்டது.
மீண்டும் ஆலோசனை
இதனிடையே சென்னையில் எம்.எல்.ஏக்கள் விடுதியில் இன்று மீண்டும் தோப்பு வெங்கடாசலம் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கூடி ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூவத்தூர் பேரம் எங்கே?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கூவத்தூரில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை என்கிற புகார் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கவிழும் எடப்பாடி அரசு?
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை எடப்பாடி கோஷ்டி சமாளிக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
