Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகிலை விட மாஸ்டர் வியாபாரம் கம்மிதான்.. ஆனால் வசூல் எப்படி தெரியுமா? விநியோகஸ்தர்கள் சொன்ன உண்மை
தமிழ்சினிமாவில் ட்ரெய்லர் வெளியான பிறகு வியாபாரம் நடந்தது எல்லாம் அந்தக் காலம் போல் ஆகிவிட்டது. தற்போது புதிய படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த உடனேயே படத்தின் வியாபாரம் பல மடங்கு நடந்துவரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அதேபோல்தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மூன்று போஸ்டர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படம் சம்மர் ரிலீஸாக வெளியாக இருப்பதால் படத்தின் வியாபாரத்தை ஜனவரியிலேயே முடித்துவிட்டனர். ஒரு படத்தின் டீஸர் கூட வெளிவராத நிலையில் மொத்த வியாபாரமும் முடிந்தது விஜய் படத்திற்கு மட்டும்தான் என்பதே ஒரு சாதனைதான்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்தவர் லலித் குமார். இவர் பிகில் படத்தின் வியாபாரத்தை விட மாஸ்டர் படத்தின் வியாபாரத்தை சற்று குறைத்து விற்றுள்ளார். இதற்கு காரணம் அனைவரும் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என தளபதி விஜய்யிடம் கூறியுள்ளார்.
தளபதி விஜய்யும் இதுதான் சரி என லலித் குமாரை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளி வருகிறாராம். இதேபோல்தான் லலித்குமார் 96 படத்தின் வியாபாரத்தை குறைத்துவிற்று அனைவரும் லாபம் சம்பாதிக்கும் வகையில் வழி செய்தாராம்.
விநியோகஸ்தர்கள் லாபம் சம்பாதித்தால் மட்டுமே சினிஉலகம் நல்லா இருக்கும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுவதால் அனைத்து முன்னணி நடிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிகில் படம் அதிக விலைக்கு விற்றதால் விநியோகஸ்தர்களால் அதிக லாபம் பெற முடியவில்லை என்ற கருத்தை அவர்கள் முன் வைத்ததன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார்களாம் மாஸ்டர் படக்குழு.
விநியோகஸ்தர்கள் ஹேப்பி அண்ணாச்சி!
