fbpx
Connect with us

என் படத்துல விஜய் சீன் வைக்க சொன்ன தல.. பிரபல இயக்குனரால் நீண்ட நாள் கழித்து வெளிவந்த உண்மை

ajith-vijay-mankatha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் படத்துல விஜய் சீன் வைக்க சொன்ன தல.. பிரபல இயக்குனரால் நீண்ட நாள் கழித்து வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித்தை பற்றி தளபதி விஜய் பேசியது தான். இவ்வளவு நாட்களாக இருவருக்குமிடையில் உள்ள நட்பு தெரியாமல் ரசிகர்கள் அடித்துக்கொண்டது தவறு என அவர்களே தெளிந்து விட்டார்கள்.

சமீபத்தில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கோட் சூட் அணிந்து வர தல அஜித் தான் காரணம் என கூறியது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இது ஒரு நல்ல விஷயமாக பட்டது.

அதைப்போல் தல அஜித்தும் தளபதி விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும். படங்களில் போட்டிருப்பது நல்ல ஆரோக்கியம்தான்.

ஆனால் அதை ரசிகர்கள் காரணம்காட்டி சமூக வலைத்தளங்களில் சண்டை கட்டிக்கொள்வது சரியில்லை என பிகில் பட இசைவெளியீட்டு விழாவிலேயே தளபதி கூறியிருந்தார்.

இதேபோல் தளபதி விஜய்க்காக ஒரு முறை தல அஜித் பேசியது சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. தல அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் மங்காத்தா. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு மங்காத்தா படத்தில் ஒரு தியேட்டர் சீனில் எந்த நடிகரின் படத்தை போடுவது என குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அஜித், எனது தம்பி விஜய்யின் படத்தை போடுங்கள் என கூறியது படக்குழுவினரை பிரமிக்க வைத்ததாக தெரிவித்திருந்தார். இதனை தற்போது தல மற்றும் தளபதி ரசிகர்கள் இருவரும் பரப்பி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top