Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியா படம் என்னுடையது.. போர்க்கொடி தூக்கிய உதவி இயக்குனர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் போர்க்கொடி தூக்கி இருக்கும் விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வனமகன் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தியா. ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்த சாய் பல்லவி தனது முதல் கோலிவுட் எண்ட்ரியை தந்து இருக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கரு என பெயர் வைக்கப்பட்டு இருந்த இப்படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் தியா என பெயர் மாற்றியது படக்குழு. கோலிவுட்டின் ஆஸ்தான பேய் பட ஜானர் தான் என்றாலும் தற்போது சமூகத்திற்கு தேவையான கருத்தும் இருக்கிறது என கோலிவுட்டில் பேச்சுகள் அடிப்படுகிறது.

இந்நிலையில், தியா படம் என்னுடையது என உதவி இயக்குனராக இருக்கும் பொன்.கே. சந்திரகுமார் தெரிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் அடிக்கடி உதவி இயக்குனர்கள் என்னுடைய கதை என சில படத்திற்கு சொந்தம் கொண்டாடும் விஷயம் நடப்பது சாதாரணமாகி வருகிறது.

இப்பட்டியலில் தற்போது சந்திரகுமாரும் இணைந்து இருக்கிறார். இதுகுறித்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் அவர், இயக்குனர் ராஜகுமாரனின் இயக்கத்தில் வெளியான ‘திருமதி தமிழ்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக பல இயக்குனர்களிடம் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

என் நண்பரிடம் கரு படத்தின் கதையை சொன்னேன். அவரும் இலங்கை தயாரிப்பாளரிடம் சொல்லி விட்டேன். படத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என தெரிவித்தார். இப்படத்திற்கு கரு, குறி அல்லது சிசு என பெயர்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். இந்நிலையில், நண்பர்கள் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தியா படம் என்னுடைய கதை என தெரிந்துக் கொண்டேன். இது என் கதை தான் என நண்பர்கள் பலருக்கு தெரியும். தியாவால் எனக்கு ஒன்றும் வேண்டாம். ஆனால், இது திருட்டு கதை தான் என உலகுக்கு தெரிய வேண்டும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top