இந்த வருடத்தில் மாஸ் ஹிட் அடித்த படங்கள்.. முதலிடத்தை தட்டி சென்ற தளபதி

புத்தாண்டு துவங்க உள்ளதால் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாநாயகி, கதாநாயகன், திரைப்படம், பாடல் என பல்வேறு லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது 2021ம் ஆண்டிற்கான சிறந்த திரைப் படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் முதல் இடத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் பிடித்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் காண்பித்த மாஸ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பிரியங்கா மோகன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை மற்றும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான டாக்டர் திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியை பகிரங்கமாக பங்கம் செய்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

மூன்றாவது இடம் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய கர்ணன் திரைப்படம் பிடித்துள்ளது. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்தால் கர்ணன் திரைப்படம் பலதரப்பட்ட ரசிகர்களால் கொண்டாட கூடிய திரைப்படமாக மாறியது.

மேலும் நான்காவது இடம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அண்ணாத்த திரைப்படம் பிடித்துள்ளது. குடும்பப்பாங்கான அண்ணாத்த திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைத்தது. இந்தப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என்ன ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து கலக்கிறது. அத்துடன் ரஜினியின் ஸ்டைலால் படம் ஹிட்டடித்தது என்றும் சொல்லலாம்.

ஐந்தாவது இடம் சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு எழுதி இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இதில் எஸ்ஜே சூர்யா-வின் எதிர்மறையான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

ஆறாவது இடம் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் பிடித்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் மனதை உருக்கியது. அந்த அளவிற்கு தற்போது சமுதாயத்தில் நிலவும் பிரச்சினையை திரையிட்டு காட்டியுள்ளது.

ஏழாவது இடம் ஆர்யா நடிப்பில் வெளியான தமிழ் வரலாற்று மற்றும் விளையாட்டு அதிரடித் திரைப்படமான சார்பட்டா பரம்பரை-க்கும், எட்டாவது இடம் விஜய் ஆண்டனி நடித்த அரசியல் அதிரடி திரைப்படம் போல கோடியில் ஒருவன் திரைப்படமும் பெற்றுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்