உலகநாயகன் கமல் அவர்கள் கட்சி துவங்கப்போவதாக பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். நேற்று இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விவரங்கள் தெரியவந்தன.

“நீங்கள் 100 நாட்களில் கட்சி துவங்கப்போவதாக சொன்னீர்களே என்று கேட்டதற்கு அது கொஞ்சம் திருத்தி வெளிவந்த செய்தி நான் அப்படி கூறவில்லை, எப்போது வருவீர்கள் 30, 60, 90 என்று நாட்களை அவர்களே சொன்னார்கள், நான் பொதுவாக இருக்கட்டுமே என்று 100 எனக் கூறினேன். அதற்காக சரியாக 100வது நாள் கட்சி துவங்குவேன் என்று அவசியமில்லை.

ரஜினியிடம் என் அரசியல் பயண துவக்கத்தை தெரிவித்தேன் அவர் மறுப்பு கூறவில்லை, எப்போது என்றுதான் வினவினார். அவருக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில் இருவரும் இணைந்து செயலாற்றுவோம்.

எனக்கு தேவையான அரசியல் அறிவை நான் அ.தி.மு.க விடமிருந்தும் எடுத்துக் கொள்வேன். அதில் எந்த தவறும் இல்லை. நான் மோடி அரசை ஆதரிப்பவன் என்று சொல்லிவிட முடியாது, யார் தவறு செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பேன்.kamal

நான் முதல்வராவேன் என்று ஒருபோதும் கூறவில்லை, கட்சி ஆரம்பித்தாலே முதல்வர் கனவு என்று சொல்லாதீர்கள். கட்சி ஆரம்பித்தாலும் முதல்வராய் யாரை வேண்டுமானாலும் என் கட்சியிலிருந்து நியமிப்பேன்.

இறுதியாக கட்சியின் பெயர் பற்றி போது “மக்கள் என்னும் வார்த்தை எனது கட்சிப் பெயரில் கட்டாயம் வரும், ஒரு வேளை அந்த பெயர் கிடைக்கா சூழ் நிலையில் வேறு பெயரை ஆலோசிப்போம். ஆனால் முடிந்த வரை மக்கள் என்ற பெயரை கட்சிப் பெயரில் வைக்க முற்படுவோம்” எனக் கூறினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரு வழியா முடிவெடுத்தாச்சு!

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் பிறகு கமல் எதுவும் செய்யவில்லை... சரமாரியாக விமர்சிக்கும் முதல் சீசன் போட்டியாளர்