புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த வாரம் டிஆர்பி-யில் முதல் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்.. சன் டிவியுடன் அப்பட்டமாக தோற்றுப் போன விஜய் டிவி

Top 5 Serials in TRP: ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் மக்கள் மனதை அதிகமாக கொள்ளையடித்து இருக்கிறது என்பதை அந்த வாரம் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ஆனால் சன் டிவியுடன் மோதும் வகையில் எப்படியாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் ஒரு இடத்தை பிடித்து விடும். ஆனால் கடந்த சில வாரங்களாக சன் டிவியுடன் போட்டி போட்ட விஜய் டிவி தோற்றுப் போய்க் கொண்டே வருகிறது. இந்த வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை விஜய் டிவி தவற விட்டுவிட்டது.

கயல்: கயலுக்கும் எழிலுக்கும் கல்யாணம் ஆனாலும் எப்படியாவது இருவருக்கும் இடையில் சண்டை மூட்டி விட்டு விரிசலை ஏற்படுத்தி எழிலிடமிருந்து கயலை நிரந்தரமாக பிரித்துக் காட்டுவேன் என்று சிவசங்கரி குடும்பத்திற்குள்ளேயே சகுனி வேலை பார்த்து வருகிறார். ஒரு பக்கம் எழில், அம்மாவை மலை போல் நம்புகிறார். இன்னொரு பக்கம் கயலுக்கு மட்டும் சிவசங்கரியின் உண்மையான முகம் தெரிந்ததால் தன் குடும்பத்தையும் வாழ்க்கையும் பாதுகாத்துக் கொள்ள கயல் போராடி வருகிறார். இந்த வாரம் 10.56 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: சூர்யா, அம்மாவை பழிவாங்க நந்தினி கழுத்தில் தாலி கட்டியதால் சூர்யா குடும்பத்தின் முன் ஒட்டுமொத்தமாக அவமானப்பட்டு வருகிறார் நந்தினி. போதாததற்கு நந்தினியின் குடும்பமும் தற்போது வந்து அவமானப்படுகிறது. இதில் என்னதான் சூர்யா, அம்மாவை எதிர்த்து நந்தனிக்கு சப்போர்ட் பண்ணினாலும் நந்தினி ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனை தான் அனுபவித்து வருகிறார். இதற்கு ஒரே தீர்வு சூர்யாவின் அம்மாவை எதிர்த்து நந்தினி சண்டை போட்டால் தான் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.59 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சிங்கப் பெண்ணே: அன்புவை நம்பி ஆனந்தியை மகேஷ் ஒப்படைத்து இருந்தாலும் தற்போது அன்பு ஆனந்திக்கு இடையில் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும் விதமாக புரிதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் வெளிவந்தால் நிச்சயம் அனைவரது கவனமும் அன்பு மீது தான் திரும்பும். அத்துடன் மகேஷும் அன்பு தான் காரணம் என்று ஆனந்தியை விட்டு விலகி விடுவார். அப்பொழுது அன்பு, ஆனந்தி மீது இருக்கும் உண்மையான காதல் மற்றும் பாசத்தினால் முழு மனதுடன் ஆனந்தியை ஏற்று வாழ்க்கை கொடுப்பார். இந்த வாரம் 8.90 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: பிரபு கஞ்சத்தனமாக இருந்தாலும் ஆதிரையே கல்யாணம் பண்ணுவதற்காக பணத்தை எல்லாம் வாரி இறைக்கிறார். இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஆதிரை, அப்பாவின் சந்தோஷத்தை மட்டும் மனதில் வைத்து பிரபுவை பிளாக்மெயில் பண்ணி எல்லா காரியத்தையும் சாதித்துக் கொள்கிறார். தற்போது பிரபு மீது விழுந்திருக்கும் பழியில் இருந்து ஆதிரை எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த வாரம் 8.76 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சுந்தரி: என்னதான் கார்த்திக் நெகட்டிவ் கேரக்டரில் கெட்டவராக இருந்தாலும் சுந்தரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது சுந்தரி குடும்பத்தை பாதுகாக்க முதல் ஆளாக கார்த்திக் தான் முன்வந்து நிற்கிறார். அந்த வகையில் இப்பொழுதும் சுந்தரிக்கு ஆபத்து வரும் பொழுது கார்த்திக் தான் உடனே போய் உதவி செய்கிறார். கார்த்திக் நல்லவரா கெட்டவரா என்று வெற்றிக்கும் சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் எப்படியோ கார்த்திக் ஏதோ ஒரு ரூபத்தில் சுந்தரிக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். இந்த வாரம் 8.28 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

Trending News