வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்.. பைனலுக்கு அனுப்பாமல் பாதியிலேயே துரத்திய விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் அமுதவாணன் பைனல் லிஸ்ட்டாக முதலில் தேர்வான நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் அடுத்தடுத்து பைனலுக்கு சென்று உள்ளனர். மேலும் அடுத்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்கும் வர இருக்கிறது.

இந்த சூழலில் தற்போது ஷிவின், நந்தினி, கதிரவன் மற்றும் ஏடிகே மீதம் உள்ளனர். இவர்களுள் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். இதில் ஷிவினுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. இவரும் பைனல் லிஸ்டில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read : ஓவர் ஆட்டம் போட்ட ஆலியா மானசா.. விஜய் டிவி விட்ட சாபத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை

சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்கும் அவரது ரசிகர்களால் ஒவ்வொரு வாரமும் ஓட்டுக்கள் அதிகமாக விழுந்து காப்பாற்றப்பட்டு வருகிறார். இதனால் அடுத்த வாரம் பணப்பெட்டியை எடுத்துச் செல்ல மைனா நந்தினிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கதிரவன் மற்றும் ஏடிகே இருவருமே ரசிகர்களால் சமமாக பார்க்கப்படுகிறார்கள். ஆகையால் இதிலிருந்து ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார். பைனலுக்கு செல்லாமல் இந்த வாரம் வெளியேறப் போவது ஏடிகே. பாடகரான ஏடிகே ஹவுஸ் மேட்சை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்.

Also Read : பார்லரில் ராதிகாவை மிரட்டிவிட்ட பாக்யா.. டிஆர்பி-யை ஏற்றுவதற்காகவே விஜய் டிவியின் வில்லத்தனம்

மேலும் இவர் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்த நிலையில் இன்னும் பைனலுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்றதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இது ஏடிகே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இதனால் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஏடிகேக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் பட்டதை யார் அடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Also Read : ஜிபி முத்துவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி.. வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சீசன் 4

- Advertisement -

Trending News