fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!

bigg-boss-team

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. விறுவிறுப்பாகும் போட்டிக்களம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் 78வது நாளான நேற்று, அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போவதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடியானது.

அதில் சக போட்டியாளர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று ஆஜித், ஆரி, சிவானி, கேப்ரில்லா, அனிதா ஆகிய 5 பேர் அடுத்த வாரத்திற்கான எவிக்சன் ப்ராசஸ்க்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில், பிக்பாஸ் போட்டி களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏனென்றால் இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தது பெரிய விஷயம் ஒன்றுமில்லை.

ஆனால் இனி வரும் வாரங்களில் யார் பிக்பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ? அவர்களுக்கு போட்டி கடுமையாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.

bb4-cinemapettai

மேலும் மக்கள் ஓட்டு தான், யார் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு செல்ல போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த கடைசி வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

அத்துடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top