3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா.. விஜய் டிவியின் இந்த வார டிஆர்பி ரேட்டிங்!

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களின் இந்தவாரக் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான மாறிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில், சென்றவாரம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பானது.

ஏனென்றால் கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருப்பது கோபியின் அப்பாவிற்கு ஏற்கனவே தெரிந்த நிலையில், அவர் வீட்டில் கோபியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதை பார்த்த எழில் தனக்கும் இந்த விஷயம் தெரியும் என்று கோபியின் அப்பா ராமமூர்த்தி இடம் தெரிவித்து ரசிகர்கள் உட்பட ராமமூர்த்திக்கும் ஷாக் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது குடும்பத்துடன் கிராமத்திற்கு சென்று பொங்கலை சிறப்பாக பாக்கியலட்சுமி குடும்பம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ரசிகர்களுக்கு பிடித்தமான விருவிருப்பு கூடுதலாக காண்பித்து பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்ற வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் புது புது பிரச்சனையை கிளப்பி சீரியலை விருவிருப்பாக்கினர். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் பாரதிகண்ணம்மாவிற்கு கிடைத்துள்ளது. பொதுவாக டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெண்பாவின் வருகையால் சீரியல் விரு விருப்புடன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

அத்துடன் இனி வரும் நாட்களில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது போன்ற கதை களத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு பிடித்தமான முறையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது பாரதிகண்ணம்மா சீரியல் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதைத்தொடர்ந்து நான்காமிடம் ராஜாராணி2 சீரியலுக்கும், ஐந்தாமிடம் தமிழன் சரஸ்வதிக்கும், ஆறாவது இடம் மௌனராகம், ஏழாவது இடத்தை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் பிடித்துள்ளது.

அதேபோல் 8-வது இடம் மதியம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலுக்கும், 9-வது இடம் முத்தழகு என்ற புத்தம் புது சீரியலுக்கும் கிடைத்துள்ளது. அதைப்போல் பத்தாமிடம் நம்ம வீட்டுப் பெண்ணுக்கும், 11-வது இடம் காற்றுக்கென்ன வேலி, 12-வது இடம் பாவம் கணேசனுக்கும், 13-வது இடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய வைதேகி காத்திருந்தாள் என்ற புத்தம் புது சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்