டிஆர்பி டாப் லிஸ்டில் இருக்கும் சன் டிவி சீரியல்.. விட்டுக்கொடுக்காமல் போட்டிபோடும் விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை வாரம் தோறும் தவறாமல் ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் டிஆர்பி-யில் டாப்-5 இடத்தைப் பிடித்த 5 சீரியல்கள் இடம்பெற்றிருக்கிறது.

விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ், ஜீ தமிழ், பாலிமர் போன்ற பிரபலமான தமிழ் சேனல்களில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பானாலும், எப்போதுமே விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை ஆக்கிரமிக்கும். அதே போன்று தான் தற்போது வெளியாகியிருக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மற்ற சேனல்களின் சீரியல்களை உள்ளே விடாமல் கடும் போட்டியாக மாறி இருக்கிறது.

இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட சன் டிவியின் கயல் சீரியல் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கிறது. இதில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக சைத்ரா நடித்திருக்கும் இந்த சீரியலில் விருவிருப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே டிஆர்பி-யில் முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் ரசிகர்கள் இவ்வளவு நாள் என்னென்ன நடக்க வேண்டும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்களோ அவையெல்லாம் வரிசையாக நடந்து கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக இந்த சீரியலை ரசிகர்கள் எப்போது ஒளிபரப்பாகும் என என முன்கூட்டியே தொலைக்காட்சி முன்பு உட்கார வைத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து மூன்றாமிடம் சன் டிவியின் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதில் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காண்பித்த கடந்த வாரம் முழுவதும் திருமண எபிசோட் காரணமாக இந்த சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருக்கிறது.

4-வது இடம் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த சீரியலில் எந்தவித விருப்பம் கடந்த வாரம் முழுவதும் நடக்கா விட்டாலும், வெண்பாவிற்கு புதிதாக ஜோடி ஒன்று கிடைத்திருப்பதால் அவர்களுடைய அட்டகாசம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. 5-வது இடம் சன்டிவியின் சுந்தரி சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் சென்றாலும் தற்போது சீரியல் டல் அடிக்கிறது. அதன் காரணமாகவே டிஆர்பி-யில் இரண்டாமிடத்தை வழக்கமாக பெரும் சுந்தரி தற்போது ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்