டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 6 சீரியல்கள்.. பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

TRP Ratings: பிரபல தனியார் சேனல்கள் சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்துவதற்கு என்றே விதவிதமான கதை சீரியல்களை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்கிறது. அதிலும் எந்த சீரியல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்துவிடும்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 6-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ளது. விரைவில் இந்த சீரியல் நிறைவடைய போவதால் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் இரண்டாம் பாகமும் விரைவில் துவங்குவதற்கான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 5-வது இடம் இனியா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. அன்பையும் காதலையும் மலைபோல் கொட்டி தீர்த்த விக்ரமுக்கு தலையில் அடிபட்டதால் பழையபடி ரெகுடுபாயாக மாறி இனியாவை டார்ச்சர் செய்து வருகிறார். 4-வது இடம் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்திருக்கிறது இதில் தங்கையை அவருடைய கணவருடன் சேர்த்து வைப்பதற்காக அண்ணன் ஒவ்வொரு நாளும் போராடுகிறார்

3-வது இடம் சுந்தரி சீரியல் பெற்றுள்ளது. சிறு வயதிலிருந்தே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருந்த சுந்தரி, இப்போது கலெக்டர் ஆகி மாஸ் காட்டுகிறார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை சுந்தரி இந்த சீரியலின் மூலம் நிரூபிக்கிறார்.

2வது இடம் எதிர்நீச்சல் சீரியல் பிடித்துள்ளது. எப்போதுமே டிஆர்பி-யில் முதலிடத்தை பிடிக்கும் இந்த சீரியல், அதிரடியாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் குணசேகரன் இல்லாததால் எப்படியாவது எதிர்நீச்சல் சீரியலை பழையபடி கொண்டு வந்து விட வேண்டும் என்று இயக்குனர் படாத பாடுபட்டு வருகிறார். ஆனாலும் தற்போது எபிசோடு பார்ப்பதற்கு அந்த அளவிற்கு சுவாரசியமாக இல்லாததால் இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது

முதல் இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் ஆக்கிரமித்திருக்கிறது. இல்லத்தரசிகளின் மனதை கவரும் வகையில் குடும்ப பாரங்களை தலையில் தலையில் சுமந்து கொண்டு கூடப்பிறந்தவர்களுக்காக போராடிவரும் சிங்கப்பெண் கயல் இந்த வாரம் முதல் இடத்திற்கு வந்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்