சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனுதினமும் பார்த்து வருகின்றனர் என்பதை, அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துவிடும். அந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் சன் டிவியின் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் முதலிடத்தைப் பிடித்து தூள் கிளப்பி இருக்கிறது.
இந்த சீரியல் துவங்கப்பட்ட சில மாதங்களே ஆனாலும் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னிலை வகிப்பது மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளது. இதேபோன்று இரண்டாவது இடத்தை அதே சன் டிவியின் சுந்தரி சீரியலும், மூன்றாவது இடத்தை ரோஜா சீரியலும், நான்காவது இடத்தை வானத்தைப்போல சீரியலும் பிடித்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெற்றிருக்கிறது. அதைப்போல் 6-வது இடம் அதே விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே டிஆர்பி-யில் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது.
இதைத்தொடர்ந்து ஏழாவது இடம் சன்டிவியின் அன்பே வா சீரியலுக்கும், எட்டாவது இடம் அருவி சீரியலுக்கும், ஒன்பதாவது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும், பத்தாவது இடம் பாண்டவர் இல்லம் சீரியலும் கிடைத்திருக்கிறது.
இவ்வாறு கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்தில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலும் இடம்பெறாதது சில சின்னத்திரை ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. பொதுவாக இந்த சீரியல்கள் டாப் 5 இடத்தில் பெறுவது விளக்கம் ஆனால் இந்த முறை அதைக் குறித்த தவறிவிட்டது.
ஏனென்றால் கடந்த வாரம் முழுவதும் இந்த இரண்டு சீரியல்களும் சுவாரஸ்யம் குறைந்து காணப்பட்டதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும் கடந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்டில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கிறது.