Tamil Cinema News | சினிமா செய்திகள்
லொஸ்லியாவை நாமினேட் செய்த பிக்பாஸ் போட்டியாளர். யார் தெரியுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள். நாமினேஷன் வீடியோ
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் உண்மையான முகம் தற்போது தான் வெளியே வருகிறது. முதல் இரண்டு நாட்கள் பாசமழை பொழிந்த போட்டியாளர்கள் தற்போது சண்டை, சச்சரவு, வெறுப்பு ஆகியவற்றைக் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரின் மீதுகாட்டி வருகின்றனர்.
முதல் வாரத்தில் நாமினேஷன் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். தற்போது நடைபெறுவது இரண்டாவது வாரம் என்பதால் நாமினேஷன் நடைபெற உள்ளது ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேஷன் முறையில் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸில் இருக்க தகுதியில்லை என்பதை தெரிவித்து வருகின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் குடும்பம் போல் இருந்த அனைவரும் தற்போது ஒவ்வொருத்தரும் குறை கூறி வருகின்றனர்.
சேரன் நாமினேஷன் முறையில் லொஸ்லியா மற்றும் தர்ஷன் இவர்கள் இருவரும் சற்று உண்மை முகத்தை காட்டாமல் இருப்பதாக தெரிவித்து நாமினேசன் செய்துள்ளார்.
மீரா மிதுன் நாமினேஷன் முறையில் அபிராமி மற்றும் சாட்சிஅகர்வால் நாமினேட் செய்துள்ளார்.
பாத்திமா பாபு நாமினேஷன் செய்முறையில் சரவணன் மீனாட்சி கவின் மற்றும் சரவணனை நாமினேசன் செய்துள்ளார்.
