புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நவம்பர் 1 ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்.. தியேட்டரைப் போல் சிக்ஸர் அடிக்க வரும் லப்பர் பந்து

This Week OTT Release: பல வாரங்களாக ஆரவாரமாக எதிர்பார்த்த தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது. அதை முன்னிட்டு தியேட்டரில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தோடு கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் மோதியது.

இதில் அமரன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வசூலும் குவிந்து வருகிறது. அதே சமயம் ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஓடிடி தளத்தில் எந்த படங்கள் வெளியாகிறது என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம். அதன்படி ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் படமான பிளாக் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

அதேபோல் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தியேட்டரில் சக்கை போடு போட்ட லப்பர் பந்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது டிஜிட்டலிலும் ஆதரவை கொடுக்க தயாராகிவிட்டனர்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

இதைத்தொடர்ந்து சதீஷ் நடிப்பில் வெளியான திரில்லர் படமான சட்டம் என் கையில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படங்களை தவிர மற்ற மொழி படங்களும் வெளியாகி இருக்கிறது.

அந்த வரிசையில் தெலுங்கு படமான விஸ்வம், பாலிவுட் படமான யுத்ரா, ஹாலிவுட் படமான ஸ்ட்ரேஞ்ச் டார்லிங், தி ப்ளூ கேவ் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் Murder Mindfully ஜெர்மன் வெப் தொடர் வெளியாகி உள்ளது.

இப்படியாக தீபாவளி பண்டிகைக்காக தியேட்டரை போலவே டிஜிட்டல் தளங்களும் பல படங்களை வெளியிட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் இந்த வார இறுதியை தங்களுக்கு பிடித்த படங்களோடு கொண்டாடலாம்.

- Advertisement -

Trending News