இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தான் .. ரொம்ப ஓவரா சேட்டை பண்ணா இப்படித்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் யார் வெளியேறுவார் என்று மக்கள் ஓட்டு போட்டு தீர்மானிப்பார்கள்.

அந்த வகையில் வார இறுதி நாளான இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறி உள்ளார் என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைவான ஓட்டுகள் பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

அதில் இந்த வாரம் அபிநய், அமீர், அக்ஷரா, தாமரை, சிபி, நிரூப், இமான் அண்ணாச்சி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இந்த 7 பேரில் அபிநய், தாமரைச்செல்வி, இமான் அண்ணாச்சி ஆகியோர் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த மூவரில் இமான் அண்ணாச்சி குறைவான வாக்குகளை பெற்று தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே இமான் அண்ணாச்சி தேவை இல்லாமல் அதிகமாக சண்டை போட்டு வருகிறார்.

அதிலும் சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் டார்கெட் செய்வது போல் பிரச்சனை செய்து வருகிறார். இதன் காரணமாக ரசிகர்களுக்கு இமான் அண்ணாச்சியின் மீது சிறு அதிருப்தி ஏற்பட்டது. இதுவரை சுவாரஸ்யமான நபராக இருந்த அண்ணாச்சி கடந்த சில வாரங்களாக அதை மறந்து விட்டார்.

எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, கருத்து சொல்வது, ஒரு சார்பாக பேசுவது என்று அவருடைய நடவடிக்கைகளை கவனித்த மக்கள் அவருக்கு குறைவான ஓட்டினை வழங்கியுள்ளனர். இதனால் இமான் அண்ணாச்சி குறைந்த ஓட்டுகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அண்ணாச்சி பிக்பாஸில் இருந்து வெளியேறும் எபிசோட் நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

biggboss
biggboss
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்