Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss-eviction

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் டபுள் எவிக்சனில் சிக்கப் போவது யார் தெரியுமா.? இணையத்தில் லீக்கான வோட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி இன்னும் சில  நாட்களில் முடிவடைய உள்ளது. ஆனாலும் இன்று வரை தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைக்காத ஒரே காரணத்தினால் இந்நிகழ்ச்சிக்கான வரவேற்பு மக்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

மேலும் நாள் நெருங்க நெருங்க போட்டிக் களம் விறுவிறுப்பாக உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, அனிதா சம்பத், அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், சுசித்ரா ஆகியோர் வெளியேற்ற பட்டிருக்கின்றனர்.

ஆனாலும் பிக் பாஸ்  சீசன் 4 முடிவடைய மூன்று வாரங்களே மீதமுள்ள நிலையில், வீட்டினுள் இன்னும் ஒன்பது போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இருவர் வெளியேற்றப்படலாம் என்று  சொல்லப்படுகிறது.

அதாவது இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் மூன்று வாரம் மீதி உள்ள நிலையில் ஆறு அல்லது ஏழு போட்டியாளர்கள் தான் இருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

எனவே பிக்பாஸ் இறுதி வார்த்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், அப்படி நடைபெற்றால் ஆஜித்தும், சிவானியும் கட்டாயமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் ஆஜித், சிவானி ஆகிய இருவரும் சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் செய்யவில்லை.

எனவே, இந்த தகவலை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் இந்த வாரம் பிக்பாஸ்  வீட்டில் டபுள் எவிக்சன் நடைபெறுமா? இல்லையா? என்பதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top