செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஜோடியாக வெளியேறும் போட்டியாளர்கள்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் அல்டிமேட்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுஜா, சுரேஷ் சக்கரவர்த்தி இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க உள்ள நிலையில், இந்த வாரம் இரண்டு நபர் எலிமினேட் ஆகப் போகின்றனர்.

ஆகையால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பாலாஜி முருகதாஸ், தாமரைச்செல்வி, ஜூலி, சினேகன், நிரூப், அனிதா சம்பத், ஷாரிக், அபினை ஆகிய எட்டு பேரில் இருவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போகின்றனர்.

இதில் ஷாரிக், சினேகன், அபினை மூன்று பேர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அதிலும் குறிப்பாக அபினை சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியிலும் தற்போது இரண்டாவது வாய்ப்பாக கிடைத்திருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சுவாரசியம் குறைந்த நபராகவே ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

ஆகையால் அவர் நிச்சயம் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. அவரைப்போலவே ஷாரிக் மற்றும் சினேகன் இருவரில் சினேகன் ரசிகர்களின் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை பெற்று எலிமினேட் ஆகப் போகிறார்.

இவ்வாறு இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து ஜோடியாக இரண்டு பேர் வெளியேறப் போகின்றனர். பொதுவாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்று நெருங்கும் சமயத்தில்தான் இரட்டை எலிமினேஷன் நடைபெறும்.

ஆனால் இப்பொழுதே பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் டபுள் எவிக்சனை நடத்தி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றனர். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை யார் இரண்டு பேர் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து வெளியேறுகின்றனர் என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News