fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறும் ஊமைக் கோட்டான்.. தாறுமாறான நாமினேஷன் லிஸ்ட்!

bigg-boss-eviction

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறும் ஊமைக் கோட்டான்.. தாறுமாறான நாமினேஷன் லிஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக சிங்க நடை போட்டு கொண்டிருக்கிறது. அதேபோல், வாராவாரம் நாமினேஷன் மூலம் தேர்வாகும் போட்டியாளர்களில் ஒருவர், மக்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் நிகழ்ச்சியிலிருந்து வெளிய அனுப்பப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தான் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, சுசித்ரா, அர்ச்சனா, நிஷா, ரமேஷ், அனிதா ஆகியோர் கடந்த 12 வாரங்களில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நேற்றைய எபிசோடில், நேரடி எவிக்ஷன் முறையின் மூலம் நடைபெற்றது.

அதனடிப்படையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக சிவானி, ஆஜித், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சோம் சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஆரி இந்த வாரம் வீட்டின் தலைவராக இருப்பதால் அவரை யாராலும் நாமினேட் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் வீட்டிற்குள் இன்னும் ஒன்பது கன்டஸ்டன்ட்கள் இருந்து வருகின்றனர். இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே இறுதி 3 வாரங்களில் ஆறு அல்லது ஏழு போட்டியாளர்கள் தான் இருப்பார்கள். இதனால் இந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி, கேப்ரில்லா அல்லது ஆஜித் ஆகியோரில் இருந்து ஆஜித் மட்டும் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

aajith-kamal

aajith-kamal

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top