ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் காமெடி பீஸ்

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இந்த சீசனில் விஜய் சேதுபதி அதை தொகுத்து வழங்குவது வரவேற்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் போட்டியாளர்களை எதிர்கொண்ட விதமும் ரோஸ்ட் செய்த விதமும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இந்த வாரம் அதுவே சில விமர்சனங்களை பெற்றுள்ளது.

தேவையில்லாமல் ஆட்டத்தில் மூக்கை நுழைக்கிறார். அவருடைய பேச்சு இன்சல்ட் செய்வது போல் உள்ளது. போட்டியாளர்களை முழுதாக பேச விடாமல் செய்கிறார் என பல கருத்துக்கள் கிளம்பி இருக்கிறது.

நாமினேஷனில் சிக்கிய 8 பேர்

இது பிக் பாஸ் டீமுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த வாரம் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு அர்ணவ் வெளியேறிய சூழலில் இந்த வாரம் எட்டு பேர் நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

அதன்படி முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, ஜாக்லின், பவித்ரா, அன்சிதா, தர்ஷா குப்தா ஆகியோர் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். இதில் முத்துக்குமரனுக்கு தான் தற்போது அதிகபட்ச ஓட்டுகள் கிடைத்திருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக மிக்சர் சௌந்தர்யா அதிக ஓட்டுக்களை கைப்பற்றினார். அது இப்போது மாறி இருப்பது சந்தோஷம்தான். அதை அடுத்து கடைசி மூன்று இடங்களை ஜாக்லின் அன்சிதா தர்ஷா குப்தா ஆகியோர் பிடித்துள்ளனர்.

voting-biggboss
voting-biggboss

இதில் ட்ராமா குயின் என பெயர் வாங்கிய தர்ஷா குப்தா தான் குறைந்தபட்ச ஓட்டுக்களை பெற்றுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் முறை பார்வையாளர்களை கடுப்பேற்றி வருகிறது.

கடந்த வாரம் விஜய் சேதுபதி கூட இதை சுட்டிக்காட்டி அவரை கேலி செய்தார். மாத்தி மாத்தி பேசுவது, தவறாக புரிந்து கொண்டு சண்டை போடுவது என இவருடைய செயல்கள் வீட்டில் இருப்பவர்களையே எரிச்சலூட்டி வருகிறது.

அதனாலயே ஆண்கள் இந்த வாரம் அவரை டார்கெட் செய்தனர். அதன்படி எல்லோரும் இவர் வெளியேற வேண்டும் என எதிர்பார்த்த நிலையில் ஓட்டுகளும் சாதகமாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் அம்மணி மூட்டை முடிச்சை கட்ட தயாராகிறார்.

- Advertisement -spot_img

Trending News