புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 13 பேர்.. வெளியேறப் போவது யாரு.? பிக்பாஸ் ஓட்டிங் ரிப்போர்ட்

Biggboss 8 Voting: பிக்பாஸ் சீசன் 8 கொஞ்சம் மொக்கையாக தான் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய சீசனே பரவாயில்லை என்று பார்வையாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

biggboss
biggboss

சுவாரசியம் இல்லாமல் அழுகை டிராமா சண்டை என வாரம் முழுவதும் போட்டியாளர்கள் சலிப்பூட்டுகின்றனர். அதே சமயம் வார இறுதியானால் விஜய் சேதுபதி மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்பதில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

biggboss
biggboss

இப்படி இருக்கும் சூழலில் இந்த வாரம் நாமினேஷனில் 13 பேர் சிக்கி உள்ளனர். அதில் யாருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கிறது? யார் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்? இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்? என்பதை பற்றி இங்கு காண்போம்.

வழக்கமாக ஓட்டிங் நிலவரத்தில் சௌந்தர்யா தான் முதலிடத்தை தக்க வைத்திருப்பார். அந்த அளவுக்கு அவருடைய பி ஆர் டீம் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் விஜய் சேதுபதி அவரை ரோஸ்ட் செய்த நிலையில் அவருக்கான ஓட்டுகள் தற்போது குறைந்துள்ளது.

பிக்பாஸ் 8 ஓட்டு நிலவரம்

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் கடும் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 27 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் சௌந்தர்யாவுக்கு 16% ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்தடுத்த நிலையில் விஷால், ராணவ், ஜாக்லின், அருண், பவித்ரா, ரயான, சாச்சனா, தர்ஷிகா ஆகியோர் உள்ளனர். கடைசி 3 இடத்தில் இருப்பவர்கள் டேஞ்சர் நிலையில் உள்ளனர். அதன்படி வர்ஷினி, சிவகுமார், ஆனந்தி குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

இதில் ஆனந்திக்கு வெறும் 2 சதவீத ஓட்டுகள் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. இருப்பினும் இன்னும் சில தினங்கள் இருப்பதால் இந்த நிலவரம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சிவக்குமார் பார்வையாளர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதனால் அவர் கூட வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News