ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அதிரடி காட்டும் பிக்பாஸ் 7-னின் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்.. சூனியக் கிழவிக்கு வெளியே போக நேரம் வந்துருச்சு

Bigg Boss Season 7 Voting List: இரண்டு வாரத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதிலும் கமல் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளை பார்க்க தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சநஞ்ச அதிமிதியா செய்தார்கள். ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஒரு ஏஜென்ட் கேங்கை உருவாக்கி பிக் பாஸ் போட்டியாளர்களை எந்த அளவிற்கு டார்ச்சல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி செஞ்சு விட்டுட்டார்.

சூனியக்கிளவியாகவே இருக்கும் மாயா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற நேரம் வந்துருச்சு. ஆனா இந்த வாரம் ஆண்டவர் புண்ணியத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார். ஏனென்றால் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு, பூர்ணிமா, மாயா, விசித்ரா, பிரதீப், அக்ஷயா, ஜோவிகா ஆகிய 6 பேருக்கும் மக்கள் அளித்த போட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதில் பிரதீப் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும், அதன் தொடர்ச்சியாக அக்ஷயா, ஜோவிகா, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கின்றனர். இதில் கடைசி இரண்டு இடத்தில் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் தான் இருக்கின்றனர்.

இவர்களுக்குள் 2% ஓட்டு வித்தியாசம் தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சூனியக் கிழவி மாயா வீட்டை விட்டு வெளியே போனா பாதி பிரச்சனை முடிஞ்சிடும்.

ஆனா இந்த வாரம் ஏற்கனவே பவா செல்லத்துரை உடல் நலக்குறைவாய் திடீரென்று வெளியேறி விட்டதால், ‘நோ எலிமினேஷன்’ என ஆண்டவர் அதிரடி முடிவை அறிவிக்கப் போகிறார். பவா செல்லத்துரை மட்டும் வெளியே போகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த சூனியக் கிழவியை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் இந்த வாரம் தப்புச்சாலும் அடுத்த வாரம் நிச்சயம் மாட்டிக் கொள்வார்.

பிக்பாஸ் 7ன் இந்த வார ஓட்டிங் லிஸ்ட்!

bb7-this-week-voting-list-cinemapettai
bb7-this-week-voting-list-cinemapettai
- Advertisement -

Trending News